திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (14:27 IST)

7 ஆயிரம் கோடி வசூலை தாண்டிய ஸ்பைடர்மேன்! – உலகளவில் சாதனை!

மார்வெல் சூப்பர்ஹீரோ படமான ஸ்பைடர்மேன் 12 நாட்களுக்கு 7 ஆயிரம் கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமான மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படங்களில் முக்கியமான படமான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் சில நாட்களுக்கு முன்னதாக திரையரங்குகளில் வெளியானது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் முன்னதாகவே வெளியான ஸ்பைடர்மேனுக்கு முன்பதிவு தொடங்கியபோதே 1.50 லட்சம் பேர் ஒரே நாளில் முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் பல நாடுகளில் ஸ்பைடர்மேன் படத்தை ஏராளமான ரசிகர்கள் கண்டு களிக்கும் நிலையில் வசூலிலும் ஸ்பைடர்மேன் கலக்கி வருகிறது. படம் வெளியாகி 12 நாட்களே ஆன நிலையில் படத்தின் இதுவரையிலான வசூல் ரூ.7,877 கோடி என தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு வெளியான படங்களில் அதிக வசூல் செய்த படமாக ஸ்பைடர்மேன் சாதனை படைத்துள்ளது.