செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 டிசம்பர் 2021 (10:39 IST)

சன்னிலியோனை கைது செய்ய வேண்டும்! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! – காரணம் என்ன?

சன்னிலியோன் டான்ஸ் ஆடிய பாடல் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவரை கைது செய்ய வேண்டுமென பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்தி நடிகை சன்னிலியோன் ஆடிய ஆல்பம் பாடல் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னதாக யூட்யூபில் வெளியானது. ”மதுபான் மெய்ன் ராதிகா” என்ற அந்த பாடல் கிருஷ்ணர் – ராதை இடையேயான காதலை பேசும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பாடல் கிருஷ்ணன் – ராதையை இழிவுபடுத்தும் வகையிலும், இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும் இருப்பதாக கூறி பலரும் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதை தொடர்ந்து பலர் ட்விட்டரில் சன்னி லியோனை கைது செய்ய வேண்டும் என்றும் ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.