ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Papiksha Joseph

'மெட் காலா' நிகழ்ச்சிக்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வைர நெக்லஸ் இத்தனை கோடியா?

இந்தியாவின் கடைசி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரியங்கா சோப்ரா. அதையடுத்து அவர் விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பின் பாலிவுட்டில் நுழைந்த அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்போது  பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்கள் சீரியல்களில் நடித்து வருகிறார்.
 
இதையடுத்து 40 வயதாகு பிரியங்கா சோப்ரா அவரை விட 10 வயது சிறியவரான பாப் பாடகர் நிக் ஜோன்ஸை மணந்துகொண்டார். இப்போது லண்டனில் வசிக்கும் பிரியங்கா அங்கேயே சில வெப் தொடர்களில் நடித்து வருகிறார். சில நாடுகளுக்கு முன்னர் "பாலிவுட்டில் நடந்த அரசியல்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. எனக்கு ஹாலிவுட்டில் நிறைய வாய்ப்புகள் வருகிறது. எனவே நான் ஏன் அமெரிக்காவில் தொடர்ந்து வேலை செய்வதற்கும் ஆர்வம் காட்டுகிறேன். இப்போது நான் அமெரிக்காவில் இருந்துகொண்டு இதுகுறித்து உங்களுடன் உரையாடுவதை நான் பாதுகாப்பாக உணர்கிறேன்” எனகூறியிருந்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 
 
இந்நிலையில் சமீபத்தில் அவர் கலந்துக்கொண்ட 'மெட் காலா' பேஷன் நிகழ்ச்சிக்காக அழகான பேஷியல் உடையுடன் பல்கேரியாவை சேர்ந்த 11.6 கேரட் டைமண்ட் நெக்லஸ் அணிந்துவந்தார். 
இந்த நெக்லசின் விலை இந்திய மதிப்பில் ரூ.204 கோடி என்றும் தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இதோ அந்த வீடியோ: