திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (16:25 IST)

மீண்டும் வருகிறார் நட்டோரியஸ் கேங்ஸ்டர் டாமி ஷெல்பி! – திரைப்படமாகிறது Peaky Blinders!

Peaky Blinders
ஹாலிவுட் இணைய தொடர் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பீக்கி ப்ளைண்டர்ஸ் இணையத்தொடர் திரைப்படமாக தயாராவதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.



ஹாலிவுட்டில் ஸ்டீவன் நைய் இயக்கத்தில் வெளியாகி பிரபலமடைந்த வெப் சிரிஸ்தான் பீக்கி ப்ளைண்டர்ஸ். 1900களில் லண்டனில் வாழும் ஷெல்பி சகோதரர்கள் என்ற கேங்ஸ்டர்ஸை மையப்படுத்தி உருவான இந்த வெப் சிரிஸ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 6 சீசன்களாக வெளியான இந்த பீக்கி ப்ளைண்டர்ஸ் வெப்சிரிஸில் கேங்க்ஸ்டர் டாமி ஷெல்பி கதாப்பாத்திரத்தில் சிலியன் மர்ஃபி நடித்திருந்தார்.

இந்த வெப்சிரிஸ்க்கு உலகம் முழுவதும் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இதை திரைப்படமாக தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். அதிலும் டாமி ஷெல்பி கேரக்டரில் சிலியன் மர்ஃபியே நடிக்கிறார். இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது நெட்ப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. திரையரங்க அனுபவத்தை பெற ரசிகர்கள் விரும்புவதால் அதுகுறித்து நெட்ப்ளிக்ஸ் வரும் நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Edit by Prasanth.K