ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 19 ஆகஸ்ட் 2023 (21:11 IST)

ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் ரூ.150 கோடி வசூல்

Oppenheimer
ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் இந்தியாவில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சிலியன் மர்ஃபி, ராபர்ட் டௌனி ஜூனியர் உள்ளிட்ட பலர் நடித்து ஜூலை 21 ஆம் தேதி வெளியான படம் ஓப்பன்ஹெய்மர்.

இரண்டாம் உலகப்போரின்போது ஜப்பான் மீது போடப்பட்ட அணுகுண்டுகளை கண்டுபிடிக்க காரணகர்த்தாவான விஞ்ஞானி அனுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ராபர்ட் ஓப்பென்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது இந்த திரைப்படம்.

ஜூலை 21 ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் இந்தியாவில் சில சர்ச்சைகளை எதிர்கொண்ட நிலையில் வசூலில் சாதனை படைத்துள்ளது.

அதன்படி, ஓப்பன்நெய்மர் திரைப்படம் இந்தியாவில் மட்டும்ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.