ரூ.3 லட்சம் பணமூட்டையை எடுத்து கொண்டு வெளியேறிய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்று மூன்று லட்சம் பணம் மூட்டையை எடுத்துக்கொண்டு போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆறு போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் பணம் மூட்டையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம் என பிக் பாஸ் அறிவித்தார்.
இந்த நிலையில் ரூபாய் 3 லட்சம் என்று இருந்த பணம் மூட்டையை கதிரவன் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. கதிரவன் வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்திற்காக ஷிவின், அமுதவாணன், விக்ரமன், மைனா மற்றும் அசீம் ஆகிய 5 போட்டியாளர்கள் காத்திருக்கின்றனர் என்பதும் இவர்களில் ஒருவருக்கு டைட்டில் வின்னர் பட்டம் மற்றும் 50 லட்ச ரூபாய் பரிசு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த டைட்டில் வின்னர் யார் என்பதை ஞாயிறு வரை பொறுத்து இருந்து பார்ப்போம்
Edited by Siva