1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: செவ்வாய், 13 டிசம்பர் 2022 (08:02 IST)

சென்னை புத்தக கண்காட்சி எப்போது? பபாசி அறிவிப்பு

book
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது என்பதும் புத்தகப் பிரியர்களின் அமோக ஆதரவால் இந்த கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி புத்தக கண்காட்சி தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
சென்னையில் நடைபெறும் 46வது புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது 
 
மேலும் இந்தப் புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்படும் என்றும், முதலமைச்சர் இந்த கண்காட்சியை தொடங்கி வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Siva