பைரவரை வழிபட சிறந்ததாக அஷ்டமி தினம் கருதப்படுவது ஏன்...?
எந்த தீய சக்தியும் நம்மை நெருங்க விடாமல் காப்பவர் ஸ்ரீ கால பைரவர். அப்படி காக்கும் பைரவரை வழிபட சிறந்த தினங்களாக மாதத்தின் அஷ்டமி தினம் கருதப்படுகிறது.
வளர்பிறை அஷ்டமி நாளில் ஸ்ரீகாலபை ரவர் அல்லது ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபடலாம். வளர்பிறை அஷ்டமியில் 108 காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை தாங்கள் தொழில் புரியும் அலுவலகத்திலோ அல்லது வணிக நிறுவனங்களிலோ வைத்தால் வியாபாரம் பெருகும் வீட்டில் வைத்தால் பணம் சேரும்.
பைரவரை மனதிற்கு விடாமல் நினைப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் விரைவில் உங்களிடம் வந்து சேரும். லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும். செல்வ வளம் அதிகரிக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் தைரியம் உண்டாகும்.
எட்டு திசைகளை காத்து, நம்மை வழிநடத்தும் மாபெரும் காவல் தெய்வம் தான் கால பைரவராகும். தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அஷ்ட பைரவர்களையும் வளர்பிறை அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு செய்பவர்கள், ஒரு போதும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு செய்யக்கூடாது மீறினால் வழிபாட் டின் பலன்கள் கிடைப்பது கடினம்.