1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (19:23 IST)

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா.. நவம்பர் 30ல் தொடங்குகிறது!

Palani
டிசம்பர் 6ஆம் தேதி கார்த்திகை திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் திருவண்ணாமலையில் கார்த்திகை திருவிழா மிகவும் விசேஷமாக கொண்டாடப்படவுள்ளது. 
 
இந்த நிலையில் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலிலும் கார்த்திகை திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பழனி முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழாவின் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அதனை அடுத்து ஏழு நாட்கள் கார்த்திகை திருவிழா கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக டிசம்பர் 6ஆம் தேதி அன்று மகாதீபம் ஏற்றப்படும் என்றும் அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்படும் என்றும் மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மகா தீபம் ஏற்றுதல் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது 
 
கார்த்திகை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்து வருவதாகவும் அன்றைய தினம் வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran