ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (18:37 IST)

மாவிலை தோரணம் கட்டுவதற்கான காரணம்...

வீட்டில் உள்ளவர்கள் உடல் ஆரோக்கியம் பெறவேண்டும் என்பதற்காக இது போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி உள்ளனர் நமது முன்னோர்கள். எதற்காக மாவிலைகளை வீட்டில் கட்டுகிறோம் என்றால், வீட்டில் நுழையும் துர் தேவதைகளை வீட்டிற்கு வருவதை தடுக்கும்.
 
நூலை மஞ்சளில் தோய்த்து எடுத்து, மாவிலைகளை ஒரே அளவு உள்ளதாக எடுத்துக் கொள்ளவேண்டும். பிறகு அதனை சுத்தம் செய்து  துடைத்து, அதில் மஞ்சள் தடவி குங்குமம் வைத்து நன்கு காயவைத்து கட்டவேண்டும். இதனுடன் சேர்த்து வேப்பிலைகளையும் சேர்த்து கட்ட  வேண்டும். இதனை ஒரு பக்கங்களில் மட்டும் கட்டினால் போதுமானது.
 
நிலவாசற்படியில் இந்த மாவிலை தோரணத்தை விஷேச நாள்களிலும், பண்டிகையின் போதும் கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் கட்டுவதை வழக்கத்தில் வைத்துள்ளோம். மாவிலைகளுக்கு ஒரு சிறப்பு தன்மை உண்டு. அவை மரத்தில் இருந்து பறித்த பிறகும் கரியமில வாயுவை  எடுத்து கொண்டு ஆக்ஸிஜனை வெளிவிடும் தன்மை கொண்டது.
 
மா இலைகள் ஒரு கிருமி நாசியாகவும் உள்ளது. நம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாட்டையும் நீக்க வல்லது. இதற்கு 11 அல்லது 21, 101, 1001  மாவிலைகளை தோரணமாக கட்டுவது நல்லது.