வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (20:02 IST)

பிள்ளையார் நோன்பு இருந்தால் கோடி புண்ணியம்!

Pillaiyar
பிள்ளையார் என்பது அனைவருக்கும் விருப்பத்துக்குரிய ஒரு கடவுளாக இருந்துவரும் நிலையில் பிள்ளையார் நோன்பு இருப்பதால் கோடிக்கணக்கான பலன் உண்டு என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். 
 
பிள்ளையார் நோன்பு இருக்கும் நாளில் முந்தைய நாளே வீடுகளை சுத்தமாக கூட்டி மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அதன் பிறகு நோன்பு அன்று நடுவீட்டில் கோலமிட்டு பணியாரம் உளுந்த வடை சீடை அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களை வைத்து பிள்ளையாருக்கு படைத்து நோன்பிருக்க வேண்டும் 
 
இவ்வாறு பிள்ளையாருக்கு பலகாரங்கள் வைத்து அவரை மகிழ்ச்சிபடுத்தி நோன்பு இருந்தால் கோடி புண்ணியம் கிடைக்கும் என ஐதீகம் கூறுகிறது. கருப்பட்டி என்றால் பிள்ளையாருக்கு விருப்பமான உணவு என்பதால் கருப்பட்டி அரிசி மாவு பிசைந்து பிள்ளையார் பிடித்து வைத்து பூஜை செய்வது நலம் பயக்கும்
 
எனவே பிள்ளையார் நோன்பு இருந்து கோடிக்கணக்கான பயனை பெற்றுக் கொள்ளுங்கள் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva