ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (19:07 IST)

திருமண தடையா? மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலுக்கு போங்க..!

மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலுக்கு சென்றால் திருமண தடை நீங்கும் என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர் 
 
மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோயில் மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் இங்கு உள்ள மயூரவல்லி தாயாருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த அர்ச்சனை காரணமாக திருமண தடைகள் விலகி திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம் ஆக கருதப்படுகிறது. அதைப்போல இந்த கோவிலில் அருகம் புல் அர்ச்சனையும் நடைபெறுகிறது. விதை எதுவும் போடாமல் தானாக முளைக்கும் அருகம்புல் மனிதனின் உடலுக்கு மட்டுமின்றி ஆன்மாவுக்கும் நல்லது.
 
இப்படிப்பட்ட அருகம்புல்லை கடவுளுக்கு மனதார வைத்து வழிபட்டால் அனைத்து தடைகளும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. குறிப்பாக மயிலாப்பூர் கேசவ பெருமாள் கோவிலில் அருகம்புல் வைத்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும் என்பது பல ஆண்டுகால நம்பிக்கையாக உள்ளது.
 
 
Edited by Mahendran