1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜூலை 2024 (07:11 IST)

15க்கும் அதிகமானவர்களை ஏமாற்றி திருமணம் செய்த ‛கல்யாண ராணி’ சத்யா கைது

15 க்கும் அதிகமான ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சத்யா என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சத்யா என்ற பெண் பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்து பின்னர் அவர்களிடம் இருந்த பொருட்களை திருடி சென்றதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுவரை 15 க்கும் அதிகமானவர்களை அவர் ஏமாற்றி உள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் தாராபுரத்தில் உள்ள ஒரு இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்ததாக மீண்டும் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சத்யாவின் செல்போன் சிக்னலை போலீஸ் தனிப்படை போலீசார் கண்காணித்து வந்த நிலையில் அவர் புதுச்சேரியில் பதுங்கி இருந்ததாக தெரியவந்தது. உடனடியாக புதுச்சேரியில் அவர் பதுங்கி இருந்த இடத்தை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக அவரை கைது செய்தனர்.

இதனை அடுத்து அவரிடம் தற்போது விசாரணை நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. தாராபுரம் இளைஞர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் சத்யா தற்போது சிக்கி உள்ளதாகவும் அவர் எத்தனை ஆண்களை ஏமாற்றினார்? எவ்வளவு பொருட்களை கொள்ளை அடித்துள்ளார்? என்பது இனி வரும் விசாரணையில் தான் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.

Edited by Siva