ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2023 (23:05 IST)

வீட்டில் செல்வம் பெருக இதைச் செய்தால் போதும்!

Lord Kubera Lakshmi
இனிமேல் வீட்டில் செல்வம் பெருக, வெள்ளிக்கிழமை தோறும் இதையெல்லாம் செய்யல்லாம்.

உலகில் உள்ள மனிதர்கள் பெரும்பாலானோர்க்கு வீடு, கார், பங்களா என்று ஆடம்பரமாக இல்லையென்றாலும் வசதியுடன் வாழ வேண்டுமென்று நினைப்பார்கள்.

ஆனால், இதற்கு வருமானம்  நிலையாக இருக்க வேண்டும், அதேசமயம், தொழில் எதாவது செய்தாக வேண்டும்.

அத்துடன் கடவுளின் அருள் கிடைக்க வேண்டும். அதற்குத்தான், குபேரன் மற்றும் மகாலட்சுமியின் கடாட்சம்னிருக்கும்போது, நம்மால் இதையெல்லாம் பெறமுடியும். இந்த இரு கடவுள்களின் அருளைப் பெற்றால் நம்மால், எல்லாம் பெறமுடியும்.

மகாலட்சுமியின் அருளைப்பெற வெள்ளிக்கிழமை வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு நீர் கொடுக்க வேண்டும். அவர்களின் வயிறு குளிர்வது போல் மகாலட்சுமியின் மனம் குளிரும். அதேபோல் மஞ்சல், குங்குமமும்கொடுக்கலாம்.

வீட்டில் தினமும் சுப்ரபாதம், விஷ்ணு சகஸ்ர  நாமமும் கூறலாம், இசை ஒலிக்கச் செய்யலாம். அதேபோல், வெள்ளிக்கிழமை மாலை பசுவிற்கு உணவு கொடுப்பதன் மூலம் லட்சுமியின் அருள் பெறலாம் என்ற கூறப்பட்டுள்ளது.

குபேரனுக்கு ஊறுகாய் பிடிக்கும் என்பதால், வீட்டில்  ஊறுகாய் வைப்பதன் மூலம் குபேரன் அருளைப் பெறலாம்.

இதையெல்லாம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.