1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Siva
Last Updated : செவ்வாய், 3 ஜனவரி 2023 (19:20 IST)

திருமண தடையை நீக்கும் குருபகவான்.. என்ன செய்ய வேண்டும்!

Guru Bhagavan
ஒரு சிலருக்கு திருமண தடை இருந்து வரும் நிலையில் அந்த தடையை விலக்க வேண்டும் என்றால் குரு பகவானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். 
 
பொதுவாக ஏழில் குரு இருந்தால் அது திருமண தடையை ஏற்படுத்தும் என்றும் இந்த பிரச்சனைக்கு ஏழாம் இடத்திற்கு அதிபதியாக இருக்கும் குருவுக்கு வியாழக்கிழமை தோறும் அர்ச்சனை செய்தால் திருமண பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் 
 
16 வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபட வேண்டும் என்றும் அவ்வாறு வழிபட்டால் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
அதேபோல் திருமணத்திற்கு பின் குழந்தை இல்லாமல் இருப்பவர்கள் குரு பகவானை வழிபட்டால் குழந்தை பிறக்கும் என்றும் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva