வியாழன், 23 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (13:16 IST)

பூணூல் அணிவிக்கப்படுவதில் இத்தனை வகைகள் உள்ளதா...?

Poonool
பூணூல் 4 வகைப்படும். கள்ளப்பூணூல், பிரம்மச்சாரி பூணூல், கிரஹஸ்தர் பூணூல், சஷ்டிஅப்த பூர்த்தி பூணூல் என நான்கு வகைகள் உள்ளன.


பூணூல் அணிந்து கொள்ளக்கூடிய ஆண், பாலகனாக இருந்தால், அவர் பிரம்மச்சாரி எனும் அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவார். பூணூல் அணிந்து வேதங்களை கற்றுத் தேற வேண்டும். அவர் பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

பிரம்மச்சாரி பூணூல், கள்ளப் பூணூல்: ஒருவருக்கு முறையாக உபநயன விழா நடத்தி பூணூல் அணிவிக்கப்பட்டால் அவர் அதை கழற்றக்கூடாது. ஆனால் உபநயன விழா நடத்தாமல், ஆவணி அவிட்ட நாளன்று பங்கேற்று பூணூல் சாஸ்திரத்திற்காக அணிந்தால் அந்த பூணூலை கழற்றி விடலாம். இந்த பூணூலுக்கு கள்ளப் பூணூல் என்கிறோம்.

திருமணமாகத நபருக்கு பிரமச்சரிய பூணூல் அணிவிக்கப்படுகிறது. இந்த பிரமசாரி பூணூல், கள்ளப் பூணூலில் 3 நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும். அந்த முடிச்சுக்கு பிரம்ம முடிச்சு எனப்படுகிறது.

ஆவணி அவிட்ட விரத பலன்கள்: ஆவணி அவிட்ட விரதம் கடைப்பிடித்து பூணூலை அணிந்து கொண்டவர்களுக்கு எந்த ஒரு தீமையோ, துன்பமோ ஏற்படாது. எதிரிகளால் தொல்லை உண்டாகாது.

கிரஹஸ்தர் பூணூல்: திருமணமானவர் அணியக்கூடிய பூணூல் கிரஹஸ்தர் பூணூல் எனப்படுகிறது. இதில் ஆறு நூல்கள் இணைத்து கட்டப்பட்டிருக்கும்.

சஷ்டி அப்தி பூணூல்: 60 வயதான ஒருவருக்கு செய்யப்படும் கல்யாணம் ஷஷ்டிஅப்த பூர்த்தி சாந்தி வைபவம் எனப்படும். அதேபோல 60 வயதுக்கு பின் அவருக்கு 9 நூல்கள் இணைத்து கட்டப்பட்டு அணிவிக்கப்படும் பூணூலுக்குச் சஷ்டி அப்தி பூணூல் என அழைக்கப்படுகிறது.

ஆவணி அவிட்ட விரத பலன்கள்: ஆவணி அவிட்டம் விரத நியமங்களை முறையாகக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டால் அவருக்கு உபாகர்ம வினைச் செய்வது உலக நன்மைக்கு வழிவகுக்கும்.