செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:41 IST)

ஆவணி அவிட்டம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம் !!

Avani Avittam
ஆவணி அவிட்டத்தன்று பூணூல் மாற்றும் சடங்கு மட்டுமின்றி கல்வியைக் கற்கவும், கற்பிப்பதைப் போற்றக்கூடிய விழா தான் ஆவணி அவிட்டம்.ஆவணி அவிட்டம் விரத நியமங்களை முறையாகக் கடைப்பிடித்து பூணூல் அணிந்து கொண்டால் அவருக்கு உபாகர்ம வினைச் செய்வது உலக நன்மைக்கு வழிவகுக்கும்.


ஆவணி ஆவிட்டம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பூணூல் மாற்றும் சடங்கு தான். வெறும் பூணூல் மாற்றும் சடங்கு நாள் மட்டும் ஆவணி அவிட்டம் கிடையாது. அந்த தினம் வேதக் கல்வியைத் தொடங்குவதற்கு மிக உன்னத நாள் என்கிறது சாஸ்திரங்கள். அதாவது கல்வியைக் கற்கவும், கற்பிப்பதைப் போற்றக்கூடிய விழா தான் ஆவணி அவிட்டம்.

ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய காயத்திரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

காயத்ரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்தியவரை நாங்கள் தியானிக்கின்றோம். அந்த பரம்பொருள், நாங்கள் மேலான உண்மையை உணரும் அறிவை ஊக்குவிக்கட்டும்.

இந்த மந்திரம், ‘காயத்ரி’ எனும் ஒலியின் அளவைக் கொண்டு உருவானதால் இந்த மந்திரத்திற்கு “காயத்திரி மந்திரம்” என கூறப்படுகிறது. இந்த காயத்திரி மந்திரம் மூல மந்திரமாக பார்க்கப்படுகின்றது. அதே போல் ஒவ்வொரு கடவுளுக்கும், அவரை தியானித்து, வணங்கும் பொருட்டு தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளன.

பலன்கள்: காயத்ரி மந்திரம் தினமும் உச்சரிப்பதால் உடல் மற்றும் உள்ளம் பலப்படுகின்றது. காயத்திரி என்றால் ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள். அதனால் இதை தினமும் சொல்லி வந்தால் அவர் இறைவனின்  அருளால் காப்பாற்றப்படுவார்.

ஆவணி அவிட்டம் அன்று கல்வி தொடங்குவதற்கான ‘உபாகர்மா’ என சொல்லப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்ட ஸ்ராவண மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது.

சந்திரனை அடிப்படையாக கொண்டு குறிப்பிடப்படும் மாதம். அதாவது ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான காலம் ஸ்ராவண மாதமாகும். இந்த மாதத்தில் வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் அல்லது பெளர்ணமி திதியில் ஓர் ஆண்டுக்கான கல்வி தொடங்குகிறது.