வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (17:45 IST)

குழந்தை பாக்கியம் இல்லையா? இந்த கோவிலுக்கு போனால் உடனே பலன்..!

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அச்சன்கோவிலுக்கு போனால் உடனே குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையாக கூறப்படுகிறது.  
 
முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல  சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் தென் மாவட்டத்தில் உள்ள ஆறு கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவற்றில் ஒன்று தான் அச்சன்கோயில் தான்
 
 தென்காசி அருகே உள்ள இந்த கோவிலில்  குழந்தை இல்லாத தம்பதியர் சென்று வணங்கினால் அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் என்று கூறப்படுகிறது. குழந்தை இல்லாத திருமணமான பெண் தனது சேலை முந்தானையின் ஒரு சிறு பகுதியை கிழித்து இந்த கோவில் வளாகத்தில் உள்ள மரத்தில் தொட்டிலாக கட்டினால் அடுத்த ஆண்டு குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கையாக கூறப்படுகிறது. 
 
இந்த கோயில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் என்பதும் மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினம் தோறும் வருகை தருகின்றனர்
 
Edited by Mahendran