வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (13:59 IST)

என்னது அது ரம்பாவே இல்லையா?... விழுந்து விழுந்து ரசிச்சோமே… 25 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை பகிர்ந்த இயக்குனர்!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக  வலம்வந்தவர் நடிகை ரம்பா. ரஜினி, கமல், விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் டாப்  நட்சத்திரங்களுடன்  இணைந்து நடித்தவர். 90களில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இவர் திகழ்ந்தார். கவர்ச்சி மற்றும் குடும்பப் பாங்கான கதாபாத்திரங்கள் இரண்டிலும் கலக்கியவர் ரம்பா.

ஒரு கட்டத்தில் சினிமா தயாரிப்பில் இறங்கிய அவர் படம் தயாரித்து நஷ்டம் அடைந்தார். அதன் பின்னர் சினிமாவை விட்டு விலகிய ரம்பா கனடாவைச் சேர்ந்த தொழிலதிபரான இந்திரன் பத்மநாதனை 2010-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ரம்பா பற்றிய ஒரு தகவலை இயக்குனர் செல்வபாரதி பகிர்ந்துள்ளார். அவர் இயக்கிய நினைத்தேன் வந்தாய் படத்தில் ரம்பாவின் அறிமுகப் பாடல் மிகப் பிரபலம். ஆனால் அந்த பாடலில் பல ஷாட்களில் ரம்பா நடிக்கவே இல்லை என்பதை செல்வபாரதி கூறியுள்ளார். அந்த படத்தில் நடிக்க ரம்பா கால்ஷீட் கொடுக்காமல் சென்றுவிடவே, குரூப் டான்ஸரில் ஒருவரை வைத்துதான் பலக் காட்சிகளை எடுத்தேன் எனக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள் “அந்த பாட்ட விழுந்து விழுந்து ரசிச்சோமே” என புலம்பி வருகின்றனர்.