Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொலிவான சருமத்தை பெற எளிமையான அழகு குறிப்புகள்

Widgets Magazine

வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம்  கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.

 
தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்.
 
சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்படலாம். இதைப் போக்க. கோதுமை மாவில் வெண்ணையைக்  கலந்து கழுத்தைச் சுற்றி பூசவும் 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இப்படி தினசரி செய்து வந்தால் கழுத்தில் உள்ள  கருவளையம் அகன்றுவிடும்.
 
மஞ்சளை அரைத்துப்பூசினால் தான் அழகு கிடைக்கும் என்றில்லை. மஞ்சள் கலந்த நீராவி கூட அழகைக் கூட்டும். மூன்று கப்  தண்ணீரை கொதிக்க வையுங்கள். பசும் மஞ்சள் கிழங்கு ஒன்றை அரைத்து அதன் சாறை எடுத்து, கொதி நீரோடு கலந்து ஆவி  பிடியுங்கள். அடுத்து ஒரு கைப்பிடி அளவு துளசியைப் போட்டு ஆவி பிடிக்க வேண்டும். 
 
பிறகு 3 எலுமிச்சை இலை அல்லது அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடியுங்கள். இத்தனையும் ஒன்றன் பின்  ஒன்றாக செய்து முடித்ததும், கடைசியில் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தேயுங்கள். (சருமத் துவாரங்கள்  விரிவடையாமல் இருக்க ஐஸ் ஒத்தடம் அவசியம்) பின்னர், ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை பூசி முகத்தை அலசுங்கள்.
 
கறுப்பு டீ தயாரித்துக் கொள்ளுங்கள். அது குளிர்ந்ததும் அதில் பஞ்சை நனைத்துப் பிழிந்து கண்களின் மேல் வையுங்கள். புதினா சாற்றை கண்களைச் சுற்றி தடவி வர, கண்களை சுற்றிய கருவளையங்கள் நாளாடைவில் மறையும்.
 
முட்டை வெள்ளைக்கருவுடன் ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் மேல்நோக்கி மசாஜ் செய்யயும். கால் மணி நேரம் கழித்து  கழுவினால் உங்கள் முகம் ஜொலிக்கும்!
 
வேகவைத்த உருளைக்கிழங்கு, மசித்த ஆப்பிள், ஆரஞ்சு பழச்சாறு, கொஞ்சம் சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உடலெங்கும் பூசி, குளித்து வந்தால் மென்மையான, பொலிவான சருமத்தை பெறலாம்.
 
கடுகு எண்ணெயை சூடாக்கி பாதங்களில் தடவி பின்னர் இளஞ்சூடான நீரில் கால்களை வைத்திருக்கவும். தொடர்ச்சியாக  செய்தால் பாத வெடிப்புகள் மறையும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

சரும நோய்களிடமிருந்து நம்மை காப்பாற்றும் மஞ்சள்

மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் ...

news

உடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் பூ

ஆவாரம் பூவை உணவில் அடிக்கடி சேர்த்து வர மேனி எழில் பெறுவதுடன் உடல் ஆரோக்கியமும் ...

news

குடும்ப தலைவிகளுக்கான சமையல் டிப்ஸ்

சாம்பாரை இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், ...

news

உங்கள் சரும அழகை பளிச்சிட செய்யும் திராட்சை சாறு பேசியல்

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே ...

Widgets Magazine Widgets Magazine