வியாழன், 23 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (19:21 IST)

மழை, குளிர் காலத்திலும் நீரிழப்பு ஏற்படும்.. தவிர்ப்பது எப்படி?

கோடை காலத்தில் மட்டுமே நீரிழப்பு ஏற்படும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் கோடை காலம் மட்டுமின்றி குளிர்காலத்திலும் மழைக்காலத்திலும் கூட நீர் இழப்பு ஏற்படும் என்றும் அது உடல் நல பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தாகமாக இருக்கும் போது உடனடியாக தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நீர் இழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலில் நீர் இழப்புக்கு ஆளாகும்போது திரவங்களை சேமிக்க முயற்சிக்கும் என்றும் அதனால் சிறுநீர் வெளியேறுவது தாமதமாகும் என்றும் சிறுநீர் நீண்ட நேரமாக கழிக்காமல் இருந்தால் நீர் இழப்புக்கு உள்ளாகி இருப்பதை அறிகுறியாக உணர்ந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் வாய் உதடுகள் ஆகியவை வறண்டு போயிருந்தால் நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உதட்டில் சில வெடிப்புகள் இருந்தால் கூட நீரிழிப்பின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. நீர் இழப்பு ஏற்பட்டால் ரத்த ஓட்டத்தின் அளவு குறையும் அதன் சோர்வு மயக்கம் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே நீர் இழப்பு அதிகரிக்காமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

Edited by Mahendran