1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2016 (14:47 IST)

டி.வி பார்ப்பதால் அதிகரிக்கும் உயர் இரத்த அழுத்தம்

இரவில் அதிக நேரம் கண்விழித்து டி.வி. பார்த்தல், மொபைல் போனில் அதிக நேரம் அளவளாவுதல், கம்ப்யூட்டரில் அதிக நேரத்தை செலவிடுதல் போன்றவையே இன்றைய இளசுகளின் பொழுதுபோக்காக உள்ளது.


 

 
அதுபோன்று நேரத்தை செலவிட்டு ஒழுங்கான தூக்கம் இல்லாமல் போவதால், சிறிது காலத்தில் அதிக உடல் எடை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.
 
தூக்கம் குறைவதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதுடன் இதய நோய் உட்பட பல்வேறு பெரிய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்திருப்பதாக தற்போது புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
 
டீன்-ஏஜ் வயதினரில் 40 விழுக்காட்டினர் குறைந்த அளவு தூக்கத்தையும், நிம்மதியற்ற தூக்கத்தையும் கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.