புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 நவம்பர் 2022 (18:20 IST)

இளம் வயதிலேயே முதுமை தோற்றம்.. என்ன காரணம்?

anti aging
இளம் வயதிலேயே முதுமை தோற்றம்.. என்ன காரணம்?
சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் அடைவதற்கு தூக்கமின்மை உள்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதுமை தோற்றம் வருவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் ஒரு சிலருக்கு இளம் வயதிலேயே முதுமை தோற்றம் ஏற்படுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் 
 
மது அருந்துதல், புகைப்பிடித்தல், தூக்கமின்மை, சரும நோய் உள்ளிட்டவை காரணமாக இளம் வயதிலேயே வயதான தோற்றம் சிலருக்கு ஏற்படலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
 
 தினமும் சில மணி நேரங்களாவது சூரிய ஒளி உடலில் படவேண்டும் என்றும் அவ்வாறு பட்டால் தான் சருமத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும் என்றும் சருமம் சுருக்கம் அடையாமல் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
எனவே தினமும் சில மணி நேரங்களாவது வெயில் படும்படி இருக்க வேண்டும் என்பது முக்கியம். இதனை அனைவரும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
 
Edited by Siva