வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்களும்... தீர்வுகளும்...

ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்களும்... தீர்வுகளும்...

ஆஸ்துமாவை ஒரு நோய் என்று சொல்லுவதைவிட, நுரையீரலில் ஏற்படுகிற தற்காலிக சீர்குலைவு என்று சொல்லுவதுதான் பொருத்தமாக இருக்கும். இது தொற்றுநோய் இல்லை; ஆனால், குழந்தைகள் முதல் முதியோர் வரை எல்லோரையும் பாதிக்கிறது. இந்தியாவில் 2 கோடிப் பேருக்கு ஆஸ்துமா இருக்கிறது.


 
 
ஆஸ்துமா எனப்படும் நீண்ட கால நுரையீரல் பாதிப்பு நுரையீரலில் உள்ள காற்றுக் குழாய்களை குறுக்கி விடுகின்றது. இது அடிக்கடி வீஸிங் எனப்படும் சத்தமான மூச்சு மூச்சுத் தவிப்பு நெஞ்சிருக்கம் இருமல் போன்ற வெளிப்பாடுகளை ஏற்படுத்துகின்றது. இருமல் இரவிலும் மற்றும் விடியற்காலையிலும் ஏற்படும். ஆஸ்துமா எந்த வயதினரையும் பாதிக்கும் என்றாலும் குழந்தை பருவத்திலேயே அநேகமாக ஆரம்பித்து விடுகின்றது.
 
ஆஸ்துமா ஏன் ஏற்படுகின்றது?
 
* எளிதில் அலர்ஜிகளால் பாதிக்கப்படுபவர்
* பெற்றோர்களுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருத்தல்
* சிறு வயதில் ஏற்படும் சில நுரையீரல் பாதிப்புகள்
* வைரஸ் கிருமிகள்
 
பரம்பரரை காரணம் இந்த பாதிப்பு ஒருவருக்கு ஏற்படும்பொழுது சிலரது இடங்களில் பக்கத்தில் யாராவது சிகரெட் பிடித்தால் அந்த புகை அவருக்கு அதிக பாதிப்பினை கொடுக்கும். பொதுவில் சுகாதாரமான சூழ்நிலையினை கடைப்பிடிக்கும் பொழுது சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா பாதிப்பு பெரும் அளவில் கட்டுப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
 
பின்பற்ற வேண்டியவை...
 
* கடுகு எண்ணெய் சிறிது சூடு செய்து அதில் கற்பூரம் கலந்து நெஞ்சு மற்றும் முதுகில் நன்கு மசாஜ் செய்யுங்கள். இதனை நாள் ஒன்றுக்கு பலமுறை செய்யலாம்.
 
* உலர்ந்த அத்திப்பழம் 3-4 எடுத்து நன்கு நீரில் சுத்தம் செய்து பின் சிறிதளவு நீரில் நன்கு ஊற வையுங்கள். மறுநாள் காலை ஊறிய பழத்தினை சாப்பிடுங்கள் நீரினையும் குடியுங்கள்.
 
* 10-15 பூண்டு பல்லினை அரை கப் பாலில் கொதிக்க வைத்து அப்படியே நசுக்கி குடித்து விடுங்கள்.
 
* யூக்லிப்டஸ் எண்ணெயினை டிஷ்யூ பேப்பரில் தொட்டு தூங்கும் பொழுது தலை அருகே வைத்துக்கொள்ளுங்கள். இதே எண்ணையினை சிறிதளவு சுடுநீரில் போட்டு ஆவி பிடியுங்கள்.
 
நுரையீரல் பாதிப்பு உடையோருக்கு ஜீரண கோளாறும் ஏற்படுகின்றது. அதிக கொழுப்பு, சர்க்கரை, மைதா, அதிக எண்ணை உணவு, அதிக குளிர்ச்சியான உணவுகள் சளித்தொல்லையை ஏற்படுத்துவதால் இவைகளைத் தவிர்ப்பதே நல்லது. 
 
அதிக மசாலா, மாமிசம், முட்டை, ரெடிமேட் உணவுகள், மது மற்றும் புகை இவை நுரையீரலின் திசுக்களை பாதிக்கக் கூடியவை. இவைகளையும் தவிர்ப்பதே சிறந்தது. அதிக காபி மற்றும் நெஞ்செரிச்சல் கூட்டும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும். 
 
சுரைக்காய், முழு தானியம் மற்றும் அடர் பச்சை கொண்ட கீரை மற்றும் காரட் போன்றவை நுரையீரலுக்கு ஏற்ற உணவுகள். நிமிர்ந்த உடல்வாகு அளவான ஏரோபிக்ஸ் பயிற்சியும் நுரையீரலுக்கு நன்மை பயக்கும்.