வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 11 டிசம்பர் 2015 (13:02 IST)

உடலிலுள்ள உஷ்ணத்தை தணிக்கும் தண்டுக்கீரை

முளைக்கீரை தான் வளர்ந்து பெரியதானால் தண்டுக்கீரையாகிறது. இந்த தண்டுக் கீரையில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை வெளிர்ப்பச்சை நிறத்திலும்,மற்றது சிகப்பு நிறத்திலும் காணப்படும்.

 

 
 
முளைக்கீரை தான் வளர்ந்து பெரியதானால் தண்டுக்கீரையாகிறது. இந்த தண்டுக் கீரையில் இரண்டு வகை உண்டு. ஒரு வகை வெளிர்ப்பச்சை நிறத்திலும்,மற்றது சிகப்பு நிறத்திலும் காணப்படும். 
 
இவ்விரண்டில் சிகப்பு நிறத்தண்டுக் கீரை சுவை மிகுந்ததாக இருக்கும். நார்ச் சத்து மிகுந்து காணப்படுகிறது.
 
1. இந்தக் கீரை குளிர்ச்சியைத் தரவல்லது. இதில் இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்துக்கள் உள்ளன.
 
2. பச்சை நிறத்தண்டை உஷ்ண தணிவுக்குச் சாப்பிடலாம். நீர்த்தாரையில் எரிச்சல், எரிச்சலுடன் நீர் பிரிதல் இருந்தால், இக்கீரையைச் சாப்பிட குணமாகும்.
 
3. மூலச் சூடு உள்ளவர்கள், மூல நோயால் அவதியுறுபவர்கள் இக்கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர நல்லது. இதனால் உடலிலுள்ள உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியடையும்.
 
4. வயிறு அளவுக்கு அதிகமாக பெரிதாகிறதே என்று கவலைப்படுபவர்கள், பச்சை நிறத் தண்டுக்கீரையை சாப்பிட்டு வந்தால் பலன் பெறலாம்.
 
5. வாத உடல்வாகு உள்ளவர்கள், வாதவலியால் வருந்துபவர்கள், பச்சை நிறத் தண்டுக் கீரையை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
 
6. சில பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் வலியும் எரிச்சலுடன் கூடிய அதிக இரத்தப்போக்கும் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் சிவப்பு நிறத் தண்டுக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தொல்லைகள் நீங்கும்.
 
7. கருப்பையில் ஏற்படும் பல கோளாறுகளைக் குணமாக்கவல்லது. இத்தண்டுக்கீரை உஷ்ணத்தைத் தணிக்கும்.
 
8. குடலில் புண் இருந்தாலும் அதை ஆற்றும் குணம் உள்ளது. உணவை சீரமைக்கும் சக்தி பெற்றது. மலச்சிக்கலையும் போக்கவல்லது.
 
9. குளிர்ச்சியான உடல் வாகுள்ளவர்கள் கீரையுடன் பூண்டையும் சேர்த்துச் சப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி, மிளகாய் சேர்த்து பொரியல் செய்தும் சாப்பிடலாம்.
 
10. தண்டுக் கீரையில் அதிக அளவு கால்சியம் ந்றைந்து காணப்படுகிறது. மேலும் இவற்றில் உடல், தசை, எலும்பு வளர்ச்சிக்கு தேவையான சத்துக்களை தருகிறது.