வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (20:53 IST)

மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

heart attack
இதய பிரச்சினை என்பது சர்வசாதாரணமாக வந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென இதயம் செயல்படுவது நின்று விட்டால் உடனடியாக முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.
 
இதயம் செயல்படுவது திடீரென தடைபட்டால் சிபிஆர் என்று கூறப்படும் உயிர் மீட்பு சுவாசம் பற்றி அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. மாரடைப்பால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவருடைய ரத்த ஓட்டம் மற்றும் சுவாசத்தை மீட்டெடுக்க மருத்துவர் உதவி கிடைக்கும் வரை உடனடியாக சில விஷயங்களை செய்ய வேண்டும்.
 
குறிப்பாக நோயாளியை ஒரு சமமான இடத்தில் படுக்க வைத்து இரண்டு கைகளையும் மார்பின் மையத்தில் வைத்து வழக்கமான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். சுமார் 30 முறை அழுத்த வேண்டும். ஒவ்வொரு அழுத்தத்திற்கு பிறகும் மார்பு இயல்பு நிலைக்கு திரும்ப சில நொடிகள் இடைவெளி கொடுக்க வேண்டும்.
 
இவ்வாறு செய்தால் நோயாளி உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மார்பின் மையத்தில் கை வைக்கப்படும் அதே வேளையில் உங்களுடைய தோள்பட்டை கைகளுக்கு நேராக இருக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் நான் சரியான அழுத்தம் கிடைக்காது என்பதை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
Edited by Mahendran