Widgets Magazine
Widgets Magazine

பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துமா?

Widgets Magazine

நம்மால் தவிர்க்க முடியாத உணவாக இருக்கும் பிராய்லர் கோழி ஹார்மோன் ரீதியாக பல தாக்கங்கள் நம் உடலில் உண்டாக காரணியாக திகழ்கிறது. மரபணு மற்றம், பல ஊசிகள் மூலம் கொழுப்பு சத்து நிறைந்தது தான் பிராய்லர் கோழி.

 
பிராய்லர் கோழி வளர்க்க 12 விதமான கெமிக்கல்கள் பயன்படுத்துகின்றனர். இவர் அவற்றின் உணவின் மூலம் சேர்க்கப்பட்டு அளிக்கப்படுவதால் அதை உண்ணும் மனிதர்களுக்கும் ஆரோக்கிய கேடு விளையும் என கூறுகின்றனர்.
 
பிராய்லர் கோழியை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது, மஞ்சள் காமாலை,  இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். ஊசிகளின் மூலமாக பிராய்லர் கோழிகள்  தசை வளர்ச்சி ஏற்றப்படுவதால். இது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் அழிக்கும் கருவியாக மாறுகிறது.
 
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது, நாட்டுக்கோழி முட்டையில் மஞ்சள் கரு அதிகமாவும், வெள்ளை கரு குறைவாகவும் இருக்கும். ஆனால், பிராய்லர் கோழியில் வெள்ளை கரு அதிகமாகவும் மஞ்சள் கரு அதிகமாகவும் இருக்கும். இதனால்,  பிராய்லர் கோழி முட்டை உங்களுக்கு எந்தவிதமான ஊடச்சத்தையும் அளிக்காது.
 
நாட்டுக்கோழி முட்டையில் உள்ள மஞ்சள் கரு நல்ல கொலஸ்ட்ரால் சத்து கொண்டுள்ளது. வாரம் இரு நாட்டுக்கோழி முட்டை சாப்பிடுவது ஆண்மை அதிகரிக்க செய்யும் மற்றும் இதய நலனை பாதுகாக்கும்.
 
மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், நாட்கள் தள்ளி போவது, சரியான நேரத்தில் மாதவிடாய் ஏற்படாமல் போவது. பெண்கள் மத்தியில் இளம் வயதிலேயே கர்ப்பப்பை வலுவிழப்பதற்கும், ஆரோக்கியம் ரீதியான பிரச்சனைகள் உண்டாக பிராய்லர் கோழி  காரணமாக இருக்கிறது. மிக குறைந்த வயதிலேயே பெண்கள் பருவம் அடைவது. பெண்கள் முற்றிலுமாக சிறுவயது முதலே  பிராய்லர் கோழியை தவிர்க்க வேண்டியது அவசியம். மேலும், பிராய்லர் கோழி ஆண், பெண்கள் உடலில் பல்வேறு ஹார்மோன்  ரீதியான பிரச்சனைகள் உண்டாகவும், உடல் எடை அதிகரிக்கவும் முக்கிய காரணியாக இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்



Widgets Magazine
Widgets Magazine
news

மாரடைப்பு வருவதற்கான காரணங்களும், அறிகுறிகளும் பற்றி தெரிந்து கொள்வோம்!

இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ...

news

கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும் எளிய வழிகள்!

முகத்தின் அழகைக் கெடுப்பதில் முக்கியமான ஒன்று தான் கருவளையம். அத்தகைய கருவளையம் சிலருக்கு ...

news

மழைக்காலங்களில் ஏற்படும் சளி பிரச்சனைக்கு இயற்கையான முறையில் தீர்வுகள்

தற்போது அதிகம் மழை பெய்துக் கொண்டிருப்பதால் நம்மில் பலர் இந்த சளி தொல்லையால் அவதியுற்றுக் ...

news

நமது வீட்டில் உள்ள உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!

உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை ...

Widgets Magazine Widgets Magazine