திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (23:45 IST)

சிறந்த மருத்துவ பயன் நிறைந்த நொச்சி!

முழுத்தாவரமும், சிறந்த மருத்துவ பயன் கொண்டது. வயிற்றுவலி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலற்சி, கண்நோய், வீக்கங்கள், வெண்குஷ்டம், கணைய வீக்கம் ஆகியவற்றினைப் போக்கக் கூடியது. தலைமுடி வளர்தலை ஊக்குவிக்கும். மூட்டுவலிக்கு  சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.
 
* நொச்சி, சிறு மரவகையைச் சேர்ந்தத் தாவரம். வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது. மூன்று முதல் 5 கூட்டு இலைகளைக்  கொண்டது. வெண்நொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி எனப் பல ரகங்கள் இருந்தாலும் வெண்நொச்சிதான் பெரும்பாலான  இடங்களில் வளர்கிறது. கருநொச்சி அதிக மருத்துவ குணம் வாய்ந்தது.
 
* நொச்சி இலைகள் போட்டு காய்ச்சிய நீரில் குளித்தால் பயன் அடைவர். காய்ந்த இலைகளின் புகை தலைவலி மற்றும் சளி  அடைப்பினை நீக்கும். நாள்பட்ட புண்களில் இருந்து ஒழுகும் துர்நாற்றமுள்ள சீழ் மற்றும் பூச்சிகளை ஒழிக்க இலையின் சாறு மேல் பூச்சாக பயன்படுத்தப்படுகிறது. இலைச்சாறு கொண்டு தயாரிக்கப்பட்ட தைலம் காசநோய் புண்களை ஆற்ற வல்லது.
 
* நொச்சி இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில்  தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.
 
* ஒரு தேக்கரண்டி நொச்சி இலைச் சாற்றில் 1 கிராம் மிளகுத் தூள் சிறிதளவு நெய் சேர்த்து, காலை, மாலை வேளைகளில் சாப்பிட மூட்டுவலி, இடுப்பு வலி, வீக்கம் குணமாகும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். மேலும் நொச்சி, உத்தாமணி இலைகளை வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒற்றடம் கொடுக்க வேண்டும்.
 
* நொச்சி இலைகளை தலையணையாகச் செய்து உபயோகிக்க, காய்ச்சல், தலைவலி, பீனிசம் ஆகியவை குணமாகும். நொச்சி  இலையை அரைத்து மண்ணீரல் வீக்கங்களுக்குப் பற்றுப் போடலாம். நொச்சி இலையின் புகைக்கு கொசுக்கள் வராது.
 
* தானியங்களைச் சேமித்து வைக்க நொச்சி இலையைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அனைத்து வீடுகளிலும் இருக்க வேண்டிய அற்புத மூலிகை நொச்சி. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது நொச்சித்தழைகளை உடன் வைத்து விடுவர். இது பூச்சிகள் தோன்றுவதை தடுக்கும்.