1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 ஜனவரி 2023 (19:58 IST)

சாத்துக்குடி பழங்களால் ஃபேஸியல் செய்யலாமா?

Facial Tips
இயற்கையான பொருட்கள் மூலம் ஃபேஸியல் செய்வதால் முகம் பொலிவோடு எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது என்று மருத்துவர்கள் தெரிவித்து வரும் நிலையில் சாத்துக்குடி மூலம் ஃபேஸியல் செய்தால் முகத்திற்கு நல்லது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 
 
சாத்துக்குடி ஜூஸ் பருகுவது மட்டுமின்றி முகத்திற்கு ஃபேஸியல் ஆகவும் பயன்படுத்தலாம் என்றும் சருமத்தில் படியும் கறைகளை அகற்ற சாத்துக்குடி சாறு உதவும் என்றும் கூறப்படுகிறது.
 
மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்வதற்கும் சாத்துக்குடியை பயன்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடலில் இருக்கும் நச்சுத்தன்மையை அகற்றும் சக்தி சாத்துக்குடி சாறுக்கு உண்டு என்றும் தினந்தோறும் ஒரு சாத்துக்குடி ஜூஸ் குடித்தால் சருமத்திற்கு சரியான ஊட்டம் கிடைக்கும் என்றும் அதற்கு முகப்பரு போன்ற பிரச்னைகள் ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran