வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஏப்ரல் 2017 (14:09 IST)

கசப்பான பாகற்காயில் உள்ள இனிப்பான நன்மைகள்!!

காய்கறிகளில் அதிக கசப்பு தன்மை கொண்டது பாகற்காய். கசப்பு தன்மைவுடைய சிவயை பெற்றிருந்தாலும் பாகற்காய் உண்பதால் பல நன்மைகள் ஏற்படும். அவற்றை இங்கு காண்போம்...


 
 
பாகற்காயில் நீர்ச்சத்து, புரதம், மாவு, கொழுப்பு, தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புத் தாது, வைட்டமின் என எல்லா வகையான சத்துகளும் அடங்கி உள்ளன.  
 
நன்மைகள்: 
 
# பாகற்காய் ஒரு சிறந்த விஷ முறிவாக செயல்படுகிறது.
 
# உடம்பில் உள்ள நரம்புகளுக்கு சக்தியை வழங்குகிறது.
 
# கல் அடைப்பு மற்றும் மூல நோயை பாகற்காய் சாப்பிடுவதன் மூலம் குணமாகும்.
 
# கல்லீரலில் உள்ள வீக்கத்தை சரி செய்ய பாகற்காய் உதவுகிறது.
 
# நீரிழிவு நோயாளிகள் பாகற்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் நீரிழிவு சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
 
# வயிற்றில் உள்ள பூச்சிகள் மற்றும் புழுக்களை முற்றிலும் அழிக்க உதவுகிறது.
 
# பாகற்காய் சருமத்தில் உள்ள பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவையை நீங்கும். 
 
# பாகற்காய் ஆஸ்துமா, சளிப் பிடித்தல், இருமல் போன்றவற்றைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த நிவாரணியாகப் பயன்படுகின்றன.
 
# பாகற்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் நீக்கப்பட்டு, இதய நோய் வருவதைத் தடுக்கிறது.