வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2015 (15:34 IST)

சளியை விரட்டும் முசுமுசுக்கைக் கீரை

முசுமுசுக்கைக் கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லாத் பிரச்சனைகளையும் போக்க வல்லது.


 

 
முசுமுசுக்கைக் கீரை உடலுக்கு கொஞ்சம் உஷ்ணத்தை உண்டு பண்ணும். மேலும் சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை நீக்கவல்லது. இதைத் தவிர இருமல், கபம், சளி மற்று சளி, இருமல் சேர்ந்த எல்லாத் தொல்லைகளையும் போக்கும்.
 
காசநோயால் அவதியுறுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் குணமாகும்.
 
இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக் கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதுவும் காச மற்று சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யக் கூடியது.
 
முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இது சுவாச சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
 
முசுமுசுக்கைக் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம்.
 
முசுமுசுக்கைக் கீரை உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.