வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

முதுகுவலி பிரச்சனையை போக்க சில வழிமுறைகள்

முதுகுவலி பிரச்சனையை போக்க சில வழிமுறைகள்

முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது.


 
 
முதுகுத்தண்டென்பது நரம்புகள், மூட்டுகள், தசைகள், தசைநாண்கள் மற்றும் தசைநார்களுள்ள சிக்கலான ஒன்றோடொன்று இணையும் ஒரு பிணையமாகும். இவையனைத்தும் வலியை உண்டாக்கக்கூடியவையாகும். முதுகுத்தண்டில் தோன்றி கால்களுக்கும், கரங்களுக்கும் செல்லும் பெரிய நரம்புகள் வலியை முனையுறுப்புகளுக்கும் எடுத்துச் செல்லக்கூடும்.
 
ஓவர் வெயிட்டாக இருந்தாலும் முதுகு வலி வரும் வெயிட்டை குறைத்தால் கூட இடுப்பு வலி முதுகு வலியில் இருந்து விடுதலை பெறலாம். அரை  வாளி தண்ணீரை கூட தம் பிடித்து தூக்கக்கூடாது. இதனால் இடுப்பு வலி முதுகுவலி அதிகமாக ஏற்பட வாய்ப்பிருக்கு. அதிக வெய்ட் உள்ள பொருட்களை தூக்குவதை தவிர்க்க வேண்டும்.
 
முதுகுவலி இருப்பவர்கள் அதுவும் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒரே இடத்தில் வெகு நேரம் உட்காருவதை தவிர்க்கவும். ஒரு நாளைக்கு இரு முறை ஹாட் வாட்ட‌ர் பேக் ஒத்த‌ட‌ம் கொடுத்தால் 50% வ‌லி குறையும். 
 
கர்பிணி மாதம் கூடும்போது வெயிட் காலில் இறங்கும் போது அவர்களுக்கு கால் வலி பிரசவத்திற்கு பிறகு முதுகுவலி வர வாய்ப்பு அதிகம். அதற்கு 
 
அவர்கள் காலுக்கடியில் சைடில் கூட தலையணை வைத்து படுத்தால் கர்ப காலத்திலும் அதற்கு பிறகும் வரும் வலியில் இருந்து விடுதலை பெறலாம். 
 
சேரில் உட்காரும் போது பின்னாடி ஒரு சிறிய தலையணை வைத்து கொண்டு உட்காரலாம். இதனால் வலி குறையும். ரொம்ப முதுகுவலி உள்ளவர்கள் மெத்தையில் படுக்காமல் கீழே படுத்து கொண்டால் ஓரளவிக்கு கட்டு படும். 
 
எந்த ஒரு பொருளையும் கீழே சட்டென்று குனிந்து எடுக்கக்கூடாது. குழந்தைகளை குளிக்க வைக்கும் போது ஒரு சிறிய நாற்காலி போட்டு உட்கார்ந்து குளிக்க வைக்கலாம். துணிகளையும் ரொம்ப நேரம் குனிந்து துவைக்கக்கூடாது. இதனால் இடுப்பு வலி அதிகமாக வாய்ப்புள்ளது. 
 
இடுப்பு பலம் பெற முட்டை வாழைப்பழம், சிக்கன் மற்றும், மட்டன் எலும்பு சூப், உளுந்து கஞ்சி, உளுந்து சுண்டல், வெந்தய கஞ்சி போன்றவை சாப்பிடலாம். ரொம்ப இடுப்பு வலி உள்ளவர்கள், இரண்டு முட்டை அவித்து மிளகு உப்பு தூவி சாப்பிடுவது மேலும் பலனை தரும்.