1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:34 IST)

தினசரி அரிசி சோறு சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

White Rice
நம் தினசரி வாழ்வில் அரிசி சோறு அன்றாட உணவாக உள்ளது. மற்ற தானியங்கள் இல்லாமல் தினம்தோறும் சோறு மட்டுமே சாப்பிடுவது சில சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது.


  • முந்தைய காலங்களில் அன்றாட உணவுகளில் பல வகை தானியங்களில் ஒன்றாக இருந்த அரிசி இப்போது முழுநேர உணவாகிவிட்டது.
  • தொடர்ந்து அரிசி சோறு சாப்பிடுவதால் ஏனைய சத்துகள் கிடைக்காமல் போவதுடன் சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.
  • சிறு தானியங்களை விட அதிக அளவு கலோரி அரிசியில் உள்ளது. தொடர்ந்து அரிசி சாதம் சாப்பிடுவது உடலில் கொழுப்பாக சேர்ந்து எடையை அதிகரிக்கும்.
  • அரிசியில் உள்ள அதிகளவிலான க்ளைசெமி இண்டெக்ஸ் மாவுச்சத்தை உடலில் அதிகரிப்பதால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும்.


  • அரிசி சோறின் அதிகமான கலோரிகள் கொழுப்பாக மாறி இதய ரத்த நாளங்களில் சேர்வதால் இரத்த அழுத்த, இதய கோளாறு ஏற்படலாம்.
  • செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான நார்ச்சத்து மற்ற தானியங்களை விட அரிசியில் குறைவாகவே உள்ளது.
  • மூன்று வேளையும் தொடர்ந்து அரிசி உணவை உண்பதை தவிர்த்து, ஒருவேளை தவிர மற்ற நேரங்களில் கம்பு, ராகி உள்ளிட்ட தானிய உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.