வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Modified: புதன், 9 டிசம்பர் 2015 (15:09 IST)

மழை மற்றும் பனிக்காலத்தில் பாதிப்படையும் சருமத்தை பாதுகாக்க

பனிக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சரும வறட்சி உண்டாகும். இதை தவிர்க்க உள்ளுக்கு சத்துள்ள உணவு எடுத்து கொள்வதோடு, இயற்கையோடு கூடிய நிவாரணம் அளிப்பது அவசியம்.


 
 
1. பாலாடையுடன் கசகசாவை ஊறவைத்து அரைத்து முகம், கை, கால்களில் பூசி, சிறிது நேரத்துக்குப் பிறகு குளித்தால் சருமம் மென்மையாகும்.
 
2. வறண்ட சருமம் உடையவர்களூக்கு பனிக்காலத்தில் தோலில் அரிப்பு, வெடிப்பு போன்றவை ஏற்படலாம். இவர்கள் தினமும் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் கலந்து உடலில் தேய்த்துக் குளித்து வரலாம்.
 
3. பனிக்காலத்தில் பயத்த மாவு, கடலை மாவு பொன்றவற்றை பயன்படுத்துவதால் அவை சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி வரட்சியை தரும்.
 
4. ஆரஞ்சு பழத்தோல் அல்லது கமலாப் பழத்தின் தோலை, பால் ஏடு சேர்த்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு உலற விட்டு கழுவினால் சருமம் ஜொலிக்கும்.
 
5. பாலாடை அல்லது பாலாடையுடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து, ஊறிய பிறகு குளித்தால் சருமம் பளபளப்பாகும்.
 
6. பப்பாளி, ஆப்பிள் பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால், அதிகம் தண்ணீர் குடிப்பதும் சருமத்திற்கு ஆரோக்கியம் தரும். குறிப்பாக வறண்ட சருமத்தினருக்கு ஆரோக்கியம் தரும்.