1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 2 அக்டோபர் 2015 (12:38 IST)

கூந்தலை வளமாக வைத்திருக்கும் கடுகு எண்ணெய்

கூந்தல் மீது எப்பொழுதுமே பெண்களுக்கு ஆசை அதிகம் அதை பராமரிக்க அவர்கள் எடுக்கும் சிரத்தையும் சற்று அதிகமே.

கூந்தலை வளமாக்க கடுகு எண்ணெயை பயன்படுதுபவர்களின் எண்ணிக்கையும் குறைவு தான். ஆனால் அதன் பயன்களோ அதிகம் என்பது அவர்களுக்கு தெரியாது. கடுகு எண்ணெயின் பயன்பாடுகளை இந்த பதிவில் பார்ப்போம்.


 


* உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் எண்ணெய்களுள் கடுகு எண்ணெயும் ஒன்று.

* கடுகு எண்ணெய் உடலுக்கு மட்டுமின்றி, கூந்தல் மற்றும் சருமத்திற்கும் சிறந்த பலனளிக்கும்.

* உடலில் உள்ள தேவையில்லாத இடங்களில் வளரும் முடியை நீக்க கடுகு எண்ணெயை தினமும் தடவி வந்தால் நல்ல பலனளிக்கும்.

* கடுகு எண்ணெயில் கூந்தலில் ஏற்படும் பிரச்சனையைப் போக்குவதற்கான பொருள் பீட்டா கரோட்டின் இருப்பதால், இதனை கூந்தலில் பயன்படுத்தும் போது, அவை வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.

* கடுகு எண்ணெய் பொடுகுத் தொல்லையையும் நீக்கும்.

* கடுகு எண்ணெயை சூடேற்றி அதை கூந்தலில் மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்த பின் குளித்தால், தலையில் இரத்த ஓட்டமானது சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* கடுகு எண்ணெயில் சிறிது எலுமிச்சை சாற்றினை கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்தால், தலையில் உள்ள பொடுகானது நீங்கிவிடும்.

* கடுகு எண்ணெயை தயிருடன் கலந்து, தலையில் தடவி, ஊற வைத்து குளித்து வந்தால் கூந்தல் நல்ல வளர்ச்சி பெறுவதோடு பொலிவோடு இருக்கும்.