1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (16:02 IST)

ஈஸியாய் கிடைக்கும் கிர்ணி பழம்... இத்தனை நற்பலன்களா?

வெயில் காலத்தில் எளிதாக கிடைக்கும் கிர்ணி பழத்தில் உள்ள சில நற்பயன்களை தெரிந்துக்கொள்ளுங்கள்... 
 
கிர்ணி பழம் வெயில் காலத்தில் ஏற்படும் சோர்வை போக்குகிறது. சிறுநீர் எரிச்சலை தடுக்கும். மிகுந்த சத்து நிறைந்த உணவாகிறது.  
 
மலிவாக கிடைக்க கூடிய கிர்ணி பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்றுப்போக்கை குணப்படுத்தலாம். 
 
கர்ப்பிணி பெண்கள் கிர்ணி பழத்தை எடுத்துக்கொண்டால் குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். 
 
விதைகள் நீக்கிய கிர்ணி பழத்துடன், கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு கலந்து காலை, மாலை சாப்பிட்டுவர வயிற்று வலி, வயிற்றுபோக்கு சரியாகும். 
 
கிர்ணி பழம் உள் உறுப்புகளின் உஷ்ணத்தை குறைக்கிறது. புரதம், சர்க்கரைச் சத்து, இரும்பு, கால்ஷியம், விட்டமின் ஏ, சி என்று பலவிதச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன.