1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 5 மார்ச் 2018 (18:51 IST)

மருத்துவ குணங்கள் கொண்ட சுண்டைக்காய்

சுண்டைக்காயில் மருத்துவ குணங்கள் மருத்துவக் குணங்கள் ஏராளமாக உள்ளன. குறிப்பாக புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது. 

 
சுண்டைக்காயை வாரம் இருமுறை சாப்பிட்டுவதால் ரத்தம் சுத்தமாகும், உடல் சோர்வு நீங்கும். வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடுவதால் வயிற்றுக் கிருமி, மூலக்கிருமி போன்றவற்றை அகற்றும்.
 
சுவாச கோளாறு உள்ளபவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. 
 
முற்றிய சுண்டைக்காயை நசுக்கி மோரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து எடுத்து பத்திரப்படுத்திக்கொண்டு தினமும் எண்ணெயில் வறுத்துச் சாப்பிடலாம். இது மார்புச்சளி மற்றும் குடலில் உள்ள கசடுகளை நீக்கும். 
 
சுண்டை வற்றலை நெய்யில் வறுத்துப் பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டுவந்தால் நீரிழிவு நோய் பாதிப்பால் ஏற்படும் கை, கால் நடுக்கம், மயக்கம், உடல்சோர்வு, வயிற்றுப் பொருமல் போன்றவை நீங்கும்.