செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 ஜூன் 2018 (19:24 IST)

மருத்துவ குணங்கள் நிறைந்த கிவி பழம்

கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வருவதால் இதய நோய்களை தடுக்கும்.

 
கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தினமும் ஒரு கிவி பழம் சாப்பிட்டு வந்தால் மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும். கிவி பழத்தில் பொட்டாசியம் அதிகளவில் இருக்கிறது. ஆனால் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. 
 
கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ‘ஆன்டிஆக்ஸிடன்ட்’ அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது. 
 
கிவி பழத்தில் போலிக் அமிலம் அதிகமாக இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான வைட்டமின்களையும் தருகிறது. 
 
உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்வதற்கு கிவி சிறந்தது. இதில் உள்ள இரும்புச்சத்து பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கச் செய்கிறது. இரும்புச்சத்து இரத்தக்கொழுப்பை குறைப்பதோடு இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது.