மருத்துவ குணம் நிறைந்த கீரகள் எவை எவை?
கீரைகள் என்றாலே உடல் நலத்திற்கு நல்லது என்று கூறப்படும் நிலையில் ஒரு சில கீரைகள் மருத்துவ குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக பொன்னாங்கண்ணி, பாலக்கீரை, காசினிக்கீரை, மணத்தக்காளி கீரை, சிறுகீரை, அரைக்கீரை, ஆகியவை மருத்துவ குணங்கள் கொண்டது என்று கூறப்படுகிறது.
மருத்துவ குணம் கொண்ட இந்த கீரைகளை சாப்பிட்டால் இதயத்தில் ரத்த ஓட்டம் சீராகும் என்றும் உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை சிறுகீரைக்கு உள்ளது என்றும் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை மணல் தக்காளிக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அதேபோல் மஞ்சள் காமாலை நோய் வந்தவர்கள் கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிடலாம் என்றும் கூறப்படுகிறது. பொன்னாங்கண்ணி கீரை சாப்பிட்டால் உடல் சூட்டை தணிக்கும் என்றும் வழுக்கை தலையில் முடி வளரும் என்றும் கூறப்படுகிறது.
விலை குறைவாகவும் அதே நேரத்தில் மருத்துவ குணத்தில் இருக்கும் இந்த கீரைகளை சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.
Edited by Mahendran