செவ்வாய், 19 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (12:31 IST)

கண்பார்வைக்கேற்ற சிறு கீரை

தினமும் உண்ணத்தக்க கீரைகளில் இது தலையானது. எவ்வகை நோயாளிக்கும் ஏற்றது. கண் பார்வை, இரத்த நாளங்கள், ஜீரண உறுப்புகள் போன்றவற்றை பாதுகாக்கும். 


 
 
1. சிறுக்கீரையில் வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்து காணப்படுகிறது.
 
2. பிரசிவித்த பெண்களுக்கு சிறுக்கீரை மிகச்சிறந்தது. சிறுக்கீரையை பொரியல் செய்து, அதிலேயே பிசைந்து சாப்பிட சொல்வார்கள்.
 
3. சிறுக்கீரை மலச்சிக்கல் ஏற்படாமல் சிறந்த மலமிலக்கியாக செயல்படுகிறது.
 
4. சிறுக்கீரையில் புரதம், நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.
 
5. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுபடுத்துகிறது.
 
6. கீரையை மிளகுடன் சேர்த்து சூப் போன்ற உணவு வகைகள் சமைக்கும்போது சரும அலர்ஜி பூன்ற நோய்கள் குணமாகும்.
 
7. பசியை உண்டாக்குவதும், நுரையீரல் வியாதியை குணமாக்குவதும், வாதம், பித்தம், வாயுத் தொல்லை போன்றவற்றை தடுப்பதும் இந்த கீரையின் இயல்பாகும்.
 
8. இந்த கீரையின் வேரை ரசம் வைத்து சாப்பிடும்போது, சிறுநீர் பிரச்சனைகள் தீரும். 
 
9. சிறுக்கீரையை துவரம் பருப்பு, சிறும்பருப்புடனும் கூட்டு, கடையல், குழம்பு சமைத்து சாப்பிடலாம்.