1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (11:36 IST)

அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ பாதிப்புகள்: அறிகுறிகள் என்ன?

மெட்ராஸ் ஐ எனப்படுவது ஒரு சீசன் போல திடீரென தோன்றி பலரையும் பாதிக்கிறது. இதன் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை தெரிந்து கொள்வது அவசியம்.



மெட்ராஸ் ஐ ஏற்படுவதற்கான அறிகுறிகள்:
 
  • கண்கள் வழக்கத்தை விட சிவப்பாக மாறும்
  • கண்களில் உறுத்தல் மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படும்
  • கண் இமை ஓரங்களில் பூழை கட்டுதலும் மெட்ராஸ் ஐ தோன்றுவதற்கான அறிகுறி
  • கண்களில் அடிக்கடி நீர் வடிவதுடன் எதிரில் உள்ளவற்றை பார்க்க சிரமம் ஏற்படும்.
  • வெளிச்சத்தை பார்ப்பதில் சிரமங்கள் எழலாம்.
 
கண்களை பாதுகாப்பதற்கான வழிகள்:

மேற்கூரிய காரணங்களில் சில மெட்ராஸ் ஐ இல்லாவிட்டாலும் ஏற்படலாம். எனினும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம்.
  • மெட்ராஸ் ஐ பாதித்தவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
  • கண்களில் எரிச்சல், உறுத்தல் ஏற்பட்டால் கண்களை கையால் கசக்குவதை தவிர்க்க வேண்டும்.
  • முகத்தை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
  • தொடர்ந்து கண் எரிச்சல், சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண் மருத்துவரை நாடுவது நல்லது.
  • கருப்பு கண்ணாடி அணிவது மெட்ராஸ் ஐ தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும்.
 
Edit by Prasanth.K