1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (19:00 IST)

ஐடியில் வேலை செய்வதால் வந்த முதுகுவலி.. என்ன செய்ய வேண்டும்?

Pain
ஐடியில்  நீண்ட நேரமாக உட்கார்ந்து பணி செய்பவர்களுக்கு வெகு சீக்கிரமே முதுகு வலி வந்துவிடும் என்ற நிலையில் இந்த வலியை தவிர்க்க என்னென்ன சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
கால்சியம் குறைபாடு காரணமாக முதுகு வலி வருவதால் கால்சியம் அதிகம் உள்ள பால் பொருட்களை சாப்பிட வேண்டும். குறிப்பாக பால் தயிர் வெண்ணை பாலாடை கட்டி போன்ற பொருட்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
அதேபோல் தினை, உளுந்தம் பருப்பு பீன்ஸ் எள் போன்றவற்றை சாப்பிட்டால் புரதச்சத்து இரும்பு சத்து ஆகியவை கிடைக்கும். மேலும் அன்னாசி, திராட்சை ப்ளூபெர்ரி போன்ற பழங்களை சாப்பிட்டால் முதுகு வலி வருவது தவிர்க்கப்படும். 
 
மேலும் இஞ்சி துளசி இலவங்கப்பட்டை ஆகியவற்றையும் மஞ்சள் போன்றவையும் சாப்பிட்டால் முதுகு வலி குறையும். வைட்டமின் சி மற்றும் பி12 நிறைந்த காய்கறிகளை சாப்பிட வேண்டும். குறிப்பாக கத்திரிக்காய் முருங்கைக்காய் ஆகியவற்றை சாப்பிட்டால் முதுகு வலி குறையும்..
 
Edited by Mahendran