வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (14:59 IST)

தேனை எப்படி எதனுடன் கலந்து சாப்பிட்டால் நல்லது தெரியுமா?

தேனில் மருத்துவ குணங்கள் பல உள்ள நிலையில், தேனுடன் எதை கலந்து சாப்பிட்டால் நல்லது என தெரிந்துக்கொள்ளுங்கள்.
 
# சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும். 
 
# கேரட்டை மிக்ஸியில் சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும். 
 
# இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால், பித்தம் குறையும்.     
     
# மாதுளம்பழ ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும்.
 
# 1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1 ஸ்பூன் தேன் கொடுத்தால் நல்ல பசி எடுக்கும்.
 
# இரண்டு ஸ்பூன் தேனோடு, மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயூடன் கலந்து குடித்தால், கொலெஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும். 
 
# தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும். 
 
# தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 
# அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும். 
 
# ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு கரண்டி தேன் சேர்த்து சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும். 
 
# இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.