செவ்வாய், 12 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (19:29 IST)

பாக்கு அடிக்கடி போடுவதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன?

பாக்கு போடுவது மிகவும் கெட்ட பழக்கம் என்று கூறப்படும் நிலையில் பாக்கு போடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தற்போது பார்ப்போம்,
 
பாக்கு அடிக்கடி போடுவதால்  ஈறுகளில் வீக்கம் மற்றும் தொற்றுநோய்கள் உண்டாகும். மேலும்  பற்களில் கறைகள் மற்றும் ஓட்டைகள்,  வாய் புற்றுநோய் அபாயம்,  நாற்றம் மற்றும் சுவை உணர்வு இழப்பு ஏற்படலாம்.
 
அதேபோல் வயிற்று எரிச்சல் மற்றும் புண்,  குமட்டல் மற்றும் வாந்தி,  வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல்,  தொண்டை புண் மற்றும் தொற்றுநோய்கள், நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகரிப்பு வாய்ப்புண்டு
 
மேலும்  இரத்த அழுத்தம் அதிகரிப்பு,  இதய துடிப்பு அதிகரிப்பு,  மாரடைப்பு மற்றும் பக்கவாதம் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 
Edited by Mahendran