வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

உங்கள் உடல் எடையை குறைக்க அற்புதமான 6 எளிய வழிமுறைகள்

எடையைக் குறைப்பதற்காக நீங்கள் உணவைத் தவிர்த்துவந்தால், உங்கள் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து மெலிந்துவிடுவீர்கள். அதனால் எடை குறையாது. நீர்ச்சத்து அவசியம் தேவை. எனவே தேவையான அளவு உணவை சாப்பிடுங்கள்.

 
தினசரி வேலைகளைத் தொடங்கும்முன் தக்காளி அல்லது கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஜுஸ் உங்கள் உடலுக்குத் தேவையான பீட்டா கரோட்டீன், ஆன்டி- ஆக்ஸிடென்ட், எலக்ட்ரோலைட்ஸ், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைத் தருகிறது.
 
தினசரி உணவில் ஓட்ஸ், சப்பாத்தி, பழங்கள், அதிக அளவு காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் வயிற்றை  நிரப்புவதோடு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ளும்.
 
தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர,  உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.
 
நீங்கள் உண்மையில் குறைந்த பட்சம் 30 முதல் 60 நிமிடங்கள் வரை தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஒரே நேரம் செய்ய முடியவில்லை என்றால் அதில் ஒரு தவறும் இல்லை, நீங்கள் நாள் முழுவதும் சிறு சிறு பகுதியாக பிரித்தும்  செய்யலாம்.
 
ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுவதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு ஆரோக்கியமான காலை  வேளையை தொடங்க நீங்கள் தானிய‌ங்களுடன், வெட்டிய‌ ஸ்ட்ராபெர்ரிகள், வாழைப்பழங்கள் சேர்த்தும் ஆரம்பிக்கலாம்.
 
24 மணிநேரத்தில் உடலில் இருக்கும் 72 காலரியை எரிக்கும் தன்மை கொண்டது இந்த க்ரீன் டீ. உங்கள் உடலின் இயக்கத்தை மேலும் அதிகரிக்கும் இந்த க்ரீன் டீ வருடத்திற்கு 7.3 பவுண்ட் உடல் எடையைக் குறைக்கும்.