செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

ஆஸ்பிரின் மருந்தால் வயிற்றில் ஏற்படும் பாதிப்பு - ஆய்வு தகவல்

ஆஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வது அதிக ஆபத்தானது, குறிப்பாக வயதானவர்கள் எடுத்துக்கொள்வதில் பிரச்சனை உள்ளது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு கூறுகிறது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், இது இதயவலிக்கும் (heart attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில் நீண்ட காலத்துக்குப்  பயன்படுத்தப்படுவது உண்டு.

 
ஆஸ்பிரின் போன்ற வலி நிவாரணத்திற்கான மாற்று மருந்துகள் கடுமையான வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பதில்லை என்பதோடு, தொடர்ந்து நீண்ட காலம் பயன்படுத்தும்போது, கடுமையான இரைப்பைக் குடல் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
 
ஆஸ்பிரின் மருந்து பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது. நெடுங்காலமாக ரத்தப்போக்கு குறிப்பாக வயிற்றில் இருந்து அதிகரிக்கும் ஆபத்தோடு ஆஸ்பிரின் தொடர்புபடுத்தப்பட்டது. அளவுக்கு அதிகமான ஆஸ்பிரின்  வில்லைகளை எடுப்பதன் மூலம் பாதகமான விளைவுகள் ஏற்படும்
 
இந்த ஆபத்து 75 வயதுக்கு அதிகமானவர்களிடையே கணிசமாக உள்ளது என்று இந்த ஆய்வை நடத்திய ஆய்வாளர்கள்  தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் லான்சென்ட் மருத்துவ சஞ்சிகையில் பிரசுரமாகியுள்ளன.
 
வலியில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன, அவை பெரும்பாலும் ரசாயனங்களால் தயாரிக்கப்படுபவை என்பதோடு அவற்றில் சிறிதளவு மார்ஃபின், ஹெராயின், ட்ரமடல் போன்ற போதை மருந்துகளும் சேர்க்கப்படுகின்றன. இவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது.
 
இந்த வயதில் உள்ள எவரும் ஆஸ்பிரின் சிகிச்சையுடன் வயிற்றுப் பாதுகாப்புக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், தற்போது ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் அதனால் ஏற்படும் ஆபத்துகளைவிட அதிகமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.