வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 17 ஜனவரி 2020 (17:16 IST)

ருபீஸ் 2,00,000 ஒன்லி! அப்படி என்ன இருக்கு Mi ஸ்மார்ட்போன்ல..?

சியோமி நிறுவனத்தின் Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. 
 
ஆம், Mi மிக்ஸ் ஆல்ஃபா ஸ்மார்ட்போனின் டீசர் சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக சீன சந்தையில் இந்திய மதிப்பில் ரூ. 2,00,000 என்ற விலை இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 
 
Mi மிக்ஸ் ஆல்ஃபா சிறப்பம்சங்கள்: 
# ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், 12 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
# சாம்சங்கின் 108 எம்.பி. பிரைமரி கேமரா 
# செல்ஃபி கேமரா வழங்கப்படவில்லை, பிரைமரி கேமராவை கொண்டே செல்ஃபி எடுக்க முடியும்
# 20 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் 
# 40 வாட் வையர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி