வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (15:36 IST)

விலை குறைந்தது ரெட்மியின் பிரம்மாண்ட படைப்பு!!

சியோமி நிறுவனம் தனது ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்டில் தற்காலிக விலை குறைப்பை பெற்றுள்ளது. 

 
கடந்த ஜூலை மாதம் வாடிக்கையாளர்களின் அதிக எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. அறிமுகத்தின் போது ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி 128 ஜிபி மாடல் ரூ.27,999 என்றும் 8 ஜிபி 256 ஜிபி மாடல் ரூ.30,999 என விலையில் விற்பனை செய்யப்பட்டது. 
 
ஆனால் தற்போது ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்படுகிறது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு, 
  • ரெட்மி கே20 ப்ரோ 6 ஜிபி 128 ஜிபி மாடல் விலை ரூ.24,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரெட்மி கே20 ப்ரோ 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • ரெட்மி நோட் 7எஸ் ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இத்துடன் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.