முடங்கியது வாட்ஸ் ஆப்: ஹேக்கர்களின் நாச வேலையா?

Last Updated: வெள்ளி, 7 ஜூன் 2019 (08:53 IST)
உலகின் பல இடங்களில் வாட்ஸ் ஆப் முடங்கியுள்ளதாக தொடர் புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
மக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ் ஆப்புக்கு முக்கிய இடம் உண்டு. மேசேஜ், போட்டோ, ஆடியோ, வீடியோ அனுப்புதல், வாய்ஸ் கால், வீடியோ கால் என பல விஷயங்கள் வாட்ஸ் மூலம் செய்யப்படுகிறது. 
 
இந்நிலையில், உலகின் பல இடங்களில் வாட்ஸ் ஆப் செயலில் திடீரென முடக்கத்திற்குள்ளானதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பயனர்கல் தங்கள் புகார்களை டிவிட்டர் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் வாட்ஸ் ஆப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயன்றதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்து, உடனடியாக வாட்ஸ் ஆப்-ஐ அப்டேட் செய்யும் படி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. 
 
எனவே, இது ஹேக்கர்களின் நாச வேலையாக இருக்குமோ என்ற அச்சத்தில் பயனர்கள் இருக்கும் நிலையில் இது குறித்து எந்த வித தகவலையும் வெளியிடாமல் வாட்ஸ் ஆப் நிறுவனம் மெளனம் காத்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :