அசத்தல் வாட்ஸ் ஆப் அப்டேட்: ஒரே சமயத்தில் வீடியோ கால் + டெக்ஸ்ட் மெசேஜ்!!


Sugapriya Prakash| Last Updated: ஞாயிறு, 10 செப்டம்பர் 2017 (19:58 IST)
வாட்ஸ் ஆப் புதிய அப்டேட் மூலம் புதிய வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது அதே போல் மற்றுமொரு புதிய அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. 

 
 
அந்த வகையில், பிக்சர் இன் பிக்சர் வீடியோ காலிங் மற்றும் டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் என்ற இரண்டு அம்சங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் சேவையை வழங்கியுள்ளது. அதாவது, இந்த அப்டேட் மூலம் வீடியோ கால் மேற்கொள்ளும் போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி, பின்னணியில் மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் செய்ய முடியும். 
 
இதில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்றே டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும். புதிய அப்டேட் மூலம் ஒவ்வொரு முறையும் வாட்ஸ்அப் பல்வேறு புதிய வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஆண்ட்ராய்டு  மற்றும் ஐஒஎஸ் பயனாளர்களுக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மல்டிடாஸ்கிங் வசதி மூலம் வீடியோ கால் மற்றும் டெக்ஸ்ட் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும். வாட்ஸ்அப்பின் இந்த புதிய அம்சம் PiP என அழைக்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :